கதைத்தொகுப்பு

முன்னுரை

சில நல்ல கதைகளை கேட்கும் போதெல்லாம், அக்கதைகள் நாம் கேட்பதோடு நின்று விடாமல் நம் சந்ததியர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று நினைப்பதுண்டு. அதன் ஒரு முயற்சியாக இதுவரை நான் கேட்ட நல்ல கதைகளை தொகுத்து இங்கே வழங்கியுள்ளேன்.

இங்கே கூறப்பட்டிருக்கும் பெரும்பாலான கதைகளுக்கு "மூலம்" ரிஷியாக, கர்ண பரம்பரையாக இருந்தாலும் கூட நம்மைப் பொறுத்தவரை நாம் படித்த புத்தகங்கள், பத்திரிகைகள், இணைய தளங்கள் மேலும் இக்கதைகளை நமக்கு கூறிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தான் "மூலம்".

எனவே, இக்கதைகளை நீங்கள் ஏற்கனவே படித்திருக்கவோ அல்லது கேட்டு இருக்கவோ கூடும். படிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் இருக்கவேண்டும் என்பதற்காக சில கதைகளில் அங்குமிங்கும் நம்முடைய கை வண்ணம் இருக்கக்கூடும். நம்முடைய நோக்கம் இந்த நல்ல கதைகள் அடுத்த சந்ததியர்களுக்கும் சென்றடையச் செய்வதேயன்றி கதைகளுக்கு சொந்தம் கொண்டாடுவதல்ல. ஆகவே, இந்த கதைகள் உங்கள் மூலமாக மற்றவர்களையும் சென்றடையும்படி கேட்டுக்கொள்கிறேன்.

- சுப்பிரமணியன்

 
Copyright © 2020 - 2025. Powered by LAKE consulting Services.