ஸ்ரீவிஷ்ணு தத்வ மஹிமை - பாகம் II

முதல் அத்யாயம்
( ஸங்கல்பத்தால் பெறக்கூடிய ஞானம் )

ஹரி ஓம் !
ததேவ லக்3னம் ஸுதி3னம் ததேவ !
தாரா பல3ம் சந்தி3ர பல3ம் ததேவ !
வித்3யா பல3ம் தைவபல3ம் ததேவ !
லட்சுமி பதே அங்கீரியுகம் ஸ்மராமி !
ஸுப3முஹூர்த்த மஸ்து ! ஸுப்ரதிஷ்ட மஸ்து !

லக்னம் எதுவாயினும், தினம் எதுவாயினும், நக்ஷ்த்திர பலம் எதுவாயினும், சந்திர பல லக்னம் எதுவாயினும், வித்யா பலம், தெய்வ பலம்   எந்த   அளவாயினும்   லக்ஷ்மிநாதனுடைய ( ஸ்ரீமந் நாராயணனது ) திருவடிகளை நினைத்தே துவங்குவதால் ஸர்வ மங்களம் உண்டாகட்டும்.

ஓம் அச்யுதாய நம :
ஓம் அநந்தாய நம :
ஓம் கோவிந்தா3ய நம :
ஓம் கேசவாய நம :
ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நம :

( பர நிலை )
( வியூஹ நிலை )
( விபவ நிலை )
( அந்தர் யாமித்வ நிலை )
( அர்ச்சா நிலை )

இதில் ஓம் அச்யுதாய நம: என்றதினால், பரமபத நாதனாகிய ஸ்ரீமந் நாராயணன் தன்னை அண்டியவர்களை அகலவிடாமல் ரக்ஷிப்பவன், அழிவற்றவன், அடியார்களை நழுவவிடாமல் மோக்ஷத்தை அளிப்பவன், ஸகல புவனங்களுக்கும் ஆதாரமாய் உள்ளவன் என்கிறபடி பரநிலை விவரிக்கப்படுகிறது.

அடுத்ததாக ஓம் அநந்தாய நம: என்றதினால் பரமபதத்தில் எழுந்தருளியுள்ள பரவாஸு தேவனாகிய ஸ்ரீமந் நாராயணன் தன்னிடமிருந்து மூன்று வியூஹ மூர்த்திகளை தோன்றுமாறு ஸங்கல்பித்தார். அதன்படி ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன் ஆகிய மூன்று பேரும் அவரிடமிருந்து தோன்றினர். அந்த பரம புருஷனின் ( அநிருத்தனிடமிருந்து ) நான்காவது ஹம்சம் இவ்வுலகில் திருப்பாற்கடலில் அவதரித்தது. அந்த அவதாரமானது ஆதிசேஷன் மீது மோனநிலையில் பள்ளிகொண்டு ஜீவர்களின் ரக்ஷணத்தையே கருத்திற்கொண்டு விஸ்வக்ஷேனர், கருடர், நாரதர், தும்புரு போன்ற நித்யஸூரிகளால் துதிக்கப்பெற்றும் ஸ்ரீயாகிய லக்ஷ்மியுடன், ஸ்ரீதேவி, பூதேவி ஸமேதரராய் க்ஷீராப்தி நாதருக்கு அனந்தன் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ள வியூஹ நிலையை குறிக்கிறது.

பிறகு, ஓம் கோவிந்தா3ய நம: என்றதினால் கோ என்ற பசுக்களுக்கு நாயகன் என்பதாகவும், கோ எனும் பூமியை (அவதாரங்களின் மூலம் ) பிரளய ஜலத்தில் அமிழ்ந்து விடாமல் ரக்ஷிப்பவராகவும், கோ எனும் (பன்னிரு ஆதித்யர்களாகிய) பசுக்களை (குடத்தின் சக்கரத்தின் நாபியில் ஆரங்கள் இணைக்கப்பட்டிருப்பது போல்) கட்டி நடத்துபவராகவும் உள்ள விபவ நிலையை குறிக்கிறது.

பின்பு ஓம் கேசவாய நம: என்றதினால் 'க' எனப்படும் பி3ரம்மனாகவும் 'அ' எனப்படும் விஷ்ணுவாகவும் 'ஈஸ' எனப்படும் ருத்3ரனாகவும் முறையே ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரமாகிய முத்தொழிலை மேற்கொள்பவராய் இருத்தலால் கேசவன் என்றும் ஸப்3ரஹ்ம, ஸசிவ, ஸஹரி என்று நாராயண ஸூக்கத்தில் கூறியுள்ளபடி ஸகல ஜீவராசிகளின் ஹ்ருத3ய ஆகாயத்தில் அந்தர்யாமியாய் எழுந்தருளி அருள்பாலிப்பதாலும் அந்தர்யாமித்வ நிலை உணர்த்தப்படுகிறது.

ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நம: என்றதினால் எவரெவர்கள் எந்தெந்த வடிவில் என்னை வணங்குகிறார்களோ அவரவர்களுக்கு அந்தந்த வடிவில் நானே நின்று அருள் பாலிக்கிறேன் என்று பகவத் கீதையிலும் "அவரவர் தமதமது அறிவறி வகை வகை ..." என்று ஆழ்வார்கள் பாடிய படியே அர்ச்சா நிலையம் உணர்த்தப்படுகிறது. (கிருஷ்ணாய - க்ருஷி எனப்படும் பயிர் போன்ற பூமியில் 'ண' எனப்படும் விதையாகிய ஆத்மாவை விதைத்து பலனை அறுவடை செய்பவர்).

கேசவாதி முதற்கொண்டு பன்னிரு திருநாமங்களால் அங்கத்தை தொடுவதன் மூலம் அவரது வியாபகத்தன்மை அறியப்படுகிறது.

பிராணாயாமம் :
ஓம் பூ4 ! ஓம் புவ: ! ஓகு3ம் ஸுவ: ! ஓம் மஹ: ! ஓம் ஜன: ஓம் தப: !
ஓகு3ம் ஸத்யம் ! ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் ! ப4ர்கோ3 தே3வஸ்ய
தீ4மஹி ! த்4யோ யோந ப்ரசோத3யாத் !!

ஓம் காரமே பூலோகம் ! ஓம் காரமே புவர்லோகம் ! ஓம் காரமே ஸுவர் லோகம் ! ஓம் காரமே மஹத் லோகம் ! ஓம் காரமே ஜனலோகம் ! ஓம் காரமே தபலோகம் ! ஓம் காரமே ஸத்ய லோகம் ! ஓம் காரமாகிய எந்த பரமாத்மா நம்முடைய புத்தி, சக்திகளை தூண்டுகிறாரோ, அந்த அனைத்தையும் படைக்கின்றவரான பகவானுடைய ஜோதிஸ்வரூபத்தை தியானிப்போமாக !
இந்த பிராணாயாம மந்திரத்தால் பகவானின் லீலா விபூதியான இந்த காரிய பிரபஞ்சத்தில் நாம் வாழும் பூலோகம் முதலாக தபலோகம் இறுதியாக உள்ள ஏழு உலகங்களிலும் ஓம் கார வாச்யரான பரமாத்மாவிடமே நிலை பெற்றுள்ளதை அறியமுடிகிறது.

ஓமாப: ஜ்யோதிரஸ அம்ருதம் ப்ரஹ்ம பூ4ர்ப்பு4வஸ்ஸுவரோம் ! ( இந்த மந்திரத்தை சொல்லி வலது காதை தொட வேண்டியது )

கீழுலகங்களிலிருந்து மேலுலகங்கள் வரையிலான அனைத்து லோகங்களிலும் ஓம்காரமாகவும், ஜலமயமாகவும், ஜோதிமயமாகவும், ரசமயமாகவும், அமிருதமயமாகவும் வியாபித்திருப்பவர் பரப்பிரம்மமாகிய ஸ்ரீமந் நாராயணனே !

நாராயண பரப்3ரஹ்ம ! தத்வம் நாராயண பர: !
நாராயண பரஞ்ஜோதி ! ஆத்மா நாராயண பர: !

- நாராயண ஸூக்தம்

மூவேழுலகமும் உலகினில் மன்மதும் மாயோய் ! என்று மூவேழ் உலகத்தையும் படைத்ததாக கூறுகிறது பரிபாடல்.

இதுவரை பகவானின் நிலைகளை கூறிவந்த வேதமானது (பரமபதத்திலிருந்து நாம் வாழும் பூலோகம் வரை கூறப்பட்ட நிலையில்) இனி ஸங்கல்பத்தில் கால தேச வர்த்தமானத்தை குறிப்பிட்டுக்கூறுகிறது.

ஸங்கல்பம் :- மமோபாத்தா - ஸமஸ்த - துரிதக்ஷயத்வாரா - ஸ்ரீமந் நாராயண ப்ரீதியர்த்தம் - ஸுபே4 ஸோப4ந முஹுர்த்தே - ஆத்3ய ப்3ராஹ்மண த்3வீதிய பரார்த்தே ஸ்வேத வராஹ கல்பே - வைவஸ்வத மன்வந்த்ரே - அஷ்டாவிம் ஸதிதமே - கலியுகே3 - ப்ரத2மே பாதே - ஜம்பூ3த்வீபே பா4ரத வர்ஷே ப4ரத கண்டே - மேரோ: - தக்ஷிண பார்சுவே - ஸகாப்தே - அஸ்மிந் வர்த்தமாநே வ்யாவஹாரிகே - சூர்ய சந்தி3ர மாநேந - ப்ராபா4வதீநாம் - ஷஷ்ட்யா: - ஸம்வத்ஸராணம் மத்4யே - மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே - வசந்தருதெள - வைஸாக மாஸே - சுக்லபக்ஷே சதுர்த்தியாம் ஸுப4திதெள ஸௌம்யவாஸர யுக்தாயாம் ரோஹிணி நக்ஷ்த்ரயுக்தாயாம் ஸுப4நக்ஷத்ர ஸுப4யோக ஸுப4கரண ஏவம் குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமாநாயம் ஸுப4திதெள லோக க்ஷேமஸ் தை4ர்ய வீர்ய விஜய ஆயுஷ் ஆரோக்ய ஐஸ்வர்யனாம் அபி4விருத்தி3யர்த2ம் தர்ம, அர்த்த, காம, மோக்ஷ பல ஸித்தியார்தம் ஸ்ரீ விஷ்ணு தத்வ மஹிமா புஸ்தகஸ்ய த்3வீதிய பா4க் லேக2ன அத்3ய கரிஷ்யே!

பொருள் :- எனது அனைத்து பாபங்களின் நிவர்த்திக்காகவும், ஸ்ரீமந்நாராயணனது விருப்பத்திற்கினங்க ( அவரது ஆணையின்படி ) சுபமான இந்த நல்ல வேளையில் தற்போது பிரம்மாவின் ஆயுஷ்காலத்தில் பகற்பொழுதாகிய ஸ்வேத வராஹ கல்பத்தில் வைவஸ்வத மன்வந்தரமான காலத்தில் 28-வது கலியுகத்தில் முதல் கால் பாகத்தில் ஜம்பூத்வீபம் என்றழைக்கப்படும் நாம் வாழும் இந்த பூமியில் பாரத வர்ஷத்தில் பாரத கண்டத்தில் மஹாமேருவாகிய இமயமலையின் தென்பாகத்தில் சக என்னும் ஆண்டு கணக்கின்படி தற்போது வழக்கில் உள்ள பிரபவ முதலாக தொடங்கும் 60 ஆண்டுகளின் நடுவே மன்மத என்னும் பெயருள்ள ஆண்டின் உத்தராயண காலத்தில் வஸந்தருது வைஸாக மாஸத்தில் வளர்பிறை சதுர்த்தி திதியில் ரோஹிணி நட்சத்திரத்தில் சுபயோகத்தில் சுபகரணத்தில் மிக விஷேசமும்  பொருந்திய  இந்த நல்ல நாளில்  லோகத்தில்  க்ஷேமம்,  தைரியம்,  பலம், வெற்றி,
ஆயுள், ஆரோக்கியம் அனைத்து செல்வங்களின் அபிவிருத்தி முதலியவைகளுடன் அனைத்து மங்களமும் கிடைக்கும் பொருட்டும், அறம், பொருள், இன்பம், மோக்ஷம் என்னும் நால்வகை பேறுகள் கிடைக்கவும் ஸ்ரீ விஷ்ணு தத்வ மஹிமை என்ற நூலின் இரண்டாவது பாகத்தை அடியேன் எழுதுகிறேன்.
Yagna
குறிப்பு : மன்வந்தரங்களில் 6 மன்வந்தரங்கள் முடிந்து தற்சமயம் 7 வது மன்வந்தரமான வைவஸ்வத மன்வந்தரம் நடந்து கொண்டிருக்கிறது. அதேபோல் 27 சதுர் யுகங்கள் சென்று, 28 வது சதுர் யுகத்தில் கிருதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம் முடிந்து நான்காவது யுகமான கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த கலியுகத்தில், 5115 ஆண்டுகள் முடிந்து தற்போது (2014 ஆம் ஆண்டு கணக்கு படி) 5116 வது ஆண்டு நடைபெறுகிறது
ஜம்பூத்வீபம் - பூலோகம் முதலான ஏழு லோகங்களும் ஏழு த்வீபங்களாக கருதப்படும் பக்ஷத்தில் நாம் வாழும் இந்த பூமியானது ஜம்பு எனப்படும் நாவல் பழ நிறத்தில் விண்வெளியில் தென்படுவதாக ரிஷிகள் கண்டறிந்துள்ளனர். நிலாவிலிருந்து பார்க்கும் போது நமது பூலோகமானது சாம்பல் நிறத்தில் தென்படுவதாக விஞ்ஞானிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

மஹாஸங்கல்பத்தில் ஏழுலோகங்களின் வர்ணனை விரிவாக கூறப்பட்டுள்ளது. இதில் கால, தேச, வர்த்தமானத்திற்கு அப்பாற்பட்ட பரமபதநாதனாகிய ஸ்ரீமந் நாராயணன் எழுந்தருளியிருக்கும் பரமபதமும், நித்யவிபூதியும் பிறகு கால, தேச வர்த்தமானத்திற்குட்பட்ட மூலப்ரக்ருதியும் அவரது லீலா விபூதியில் அடங்கி உள்ள பூலோகத்தில் நாம் வாழும் இடத்திற்கு உள்ள தொடர்பும் எந்த காரியத்தை துவங்குகிறோமோ அந்த கார்யம் சுபமாக நடைபெறுவதற்கான பிரார்த்தனையும் கூறப்படுகிறது.

புண்யாவாசனம், யாகம் முதலியவை முடிந்த பிறகு கீழ் கண்ட மந்திரங்களை கூறி நாம் துவங்கிய காரியத்தின் பலனையும் அவரிடமே லயமடையச்செய்கிறோம்.
பூ4ஸ்வாஹா ! அக்நய இதம் நமம !! (கீழுலகிலிருந்து பூலோகம் வரையிலான ஏழு லோகங்களுக்கும் அக்னியே ஆதாரமாக இருப்பதால் அக்னியை தூதுவனாக கொண்டு பலனை ஒப்படைக்கிறோம்).
பு4வஸ்வாஹா ! வாயவ இதம் நமம !! (பூலோகத்திலிருந்து மேலுலகம் தொடக்கம் வரையில் உள்ள ஏழு லோகங்களுக்கும் வாயுவாகிய ப்ராணன்கள் ஆதாரமாய் இருப்பதால் அக்னியானது பலனை ப்ராணன்களிடம் ஒப்படைக்கிறது).
ஸுவ:ஸ்வாஹா !! ஸூர்ய இதம் நமம !! (மேலுலகங்கள் ஆகிய தேவலோகங்கள் ஏழுக்கும் சூரியனே ஆதாரமாய் இருப்பதால் ப்ராணன்கள் சூரியனிடம் பலனை ஒப்படைக்கிறது. இங்கு சூர்யன் எனபது மூலப்ரக்ருதியை சரீரமாகக்கொண்ட ஸூர்ய மண்டலத்தை குறிக்கிறது. இது தேவ லோகத்திற்கு மேல் உள்ளது.
ஓம் பூ4ர்பு3வஸ்ஸுவஸ்வாஹா ! ப்ரஜாபதயே இதம் நமம !! ( ஓம் காரமாகிய அக்ஷரத்தில் நிலை பெற்றிருக்கும் பூ, புவ, ஸுவ ஆகிய மூன்று லோகங்களுக்கும் அதிபதியாகிய பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள ப்ரஜாபதியாகிய மகாவிஷ்ணுவிடம் பலனை சூர்யன் ஒப்படைக்கிறது )
ஸ்ரீவிஷ்ணுவே ஸ்வாஹா ! ஸ்ரீவிஷ்ணுவே பரமாத்மநே இதம் நமம !! ( பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள ப்ரஜாபதியாகிய மஹாவிஷ்ணுவிற்கும் பரமபதநாதனாகிய ஸ்ரீமந் நாராயணனே ஆதாரம் என்பதால் மஹாவிஷ்ணுவின் மூலமாக நாம் செய்யும் காரிய பலன்கள் அனைத்தும் ஸ்ரீமந் நாராயணனையே சென்றடைகிறது.)

இவ்வாறு சுபகார்யம் செய்யும் கர்த்தா சுபகார்யம் செய்யும் காலம், சுபகார்யம் நடைபெறுமிடம் அதை வழி நடத்தும் ஆசார்யன் காரியபலன் இவற்றின் தொடர்பு இந்த ஸங்கல்பத்தின் மூலம் அறியப்படுகிறது. மேலும் கர்த்தாவிற்கும், பகவானுக்கும் உள்ள தொடர்பும் விளக்கப்பட்டு பகவானின் கிருபையாலேயே நாம் வாழ்கிறோம் என்பதை இந்த ஸங்கல்பம் உணர்த்துகிறது.

விஷ்ணு ஸஹஸ்ர நாமாவளியிலிருந்து மேற்கூறிய ஸங்கல்ப விளக்கத்திற்கு ஆதாரமாக உள்ள பகவானின் நாமங்களில் மூன்று மட்டும் உதாரணமாக கீழே காட்டப்பட்டுள்ளது.

ஸோமாய நம: - ஆனந்தமாகிய அமிருதத்தை பானம் செய்பவர். ஹோமம் செய்யப்படும் ஹவிஸ்ஸுகள் எல்லாம் அமிருதமாக செய்யப்பட்டு விஷ்ணுவை சென்றடைகின்றன. அவரே எல்லா யாகங்களில் புசிப்பவர். அனைத்து பலன்களையும் கொடுப்பவரும் அவரே. வேதங்களில் உரைத்தபடி அமிருதமாகிய ஹவிஸ்ஸை புசிப்பவரும் அவரே.

ஸர்வதச்சக்ஷுஸே நம: - எங்கும் எல்லாவற்றையும் தமது ஞான ஒளியால் காண்பவர்.

பூ4ர்பு3வ:ஸ்வஸ்தானேவே நம: - பூலோகம், புவர்லோகம், ஸுவர்லோகம் என்ற மூன்று லோகத்தையும் வியாபிக்கும் ஸம்ஸார விருக்ஷ வடிவினர் அல்லது பூ, புவ, ஸுவ என்ற வியாஹ்ருதி மந்திரங்களால் உலகை நடத்தி வைப்பவர்.

 
Copyright © 2020 - 2025. Powered by LAKE consulting Services.