ஸ்ரீவிஷ்ணு தத்வ மஹிமை - பாகம் II

நான்காம் அத்யாயம்
திரிபு4வனம் விஷ்ணு மீஸம் நமாமி
மூன்று பு4வனங்களையும் (மூவேழ் உலகங்களையும்) ஸரீரமாக கொண்டுள்ள விஷ்ணுவாகிய அந்த ஈசனை வணங்குகிறேன்.

விஸ்வரூபத்தால் அறியப்படும் மூவுலகும் லோகத்திரயமாகும். பூமிக்கு கீழுள்ள லோகங்கள் ஏழு, (பூமியிலிருந்து) பூமி முதலாக மேலே உள்ள உலகங்கள் ஏழு, அவற்றுக்கு மேலே உள்ள உலகங்கள் (தேவலோகம்) ஏழு எனும் மூன்றையும் லோகத்ரயம் (மூவுலகு) என்று வேதங்களிலும் அவற்றின் சாரமாக விளங்கும் உபநிஷத்துகளிலும், ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்ய ப்ரபந்தங்களிலும், பரிபாடலிலும் கூறப்பட்டுள்ளன.

இம் மூவுலகு பற்றிய ஞானத்தை அறியும்படி ஒரு சில உபநிஷத் வாக்கியங்களும் மற்றும் ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்ய ப்ரபந்தங்களிலிருந்தும் சங்க கால தமிழர் போற்றி வந்த பரிபாடல்களிலும், பகவானால் திரிவிக்ரம அவதாரத்தில், லீலா விபூதியாகவுள்ள இந்த மூவுலகங்களிலும் அளக்கப்பட்ட மஹிமைகளில் முக்கியமானவற்றை காண்போம். இந்த லீலா விபூதியைக் குறிக்கும் மகிமைகள் கீழே தரப்பட்டுள்ளன.

பூ4பா3ரதன் யஸ்ய நாபீ4ர் ..... திரிபு4வன வபுஷம் விஷ்ணு மீஸம் நமாமி !!
எவனுக்கு பூமி திருவடிகளாகவும் ஆகாசம் நாபியாகவும், வாயுவே பிராணனாகவும், சந்திர ஸூரியர்கள் கண்களாகவும், திசைகள் காதுகளாகவும், தேவலோகம் தலையாகவும், அக்னி முகமாகவும், கடல் வஸ்திரமாகவும் ஆகின்றதோ, எவனுக்கு உள்ளிருக்கும் உலகம் தேவர்கள், மனிதர்கள், பக்ஷிகள், பிராணிகள், பாம்புகள், காந்தர்வர்கள், அஸுரர்கள் ஆகியவர்களால் விளங்குகிறதோ மூவுலகையும் ஸரீரமாக கொண்ட விஷ்ணுவாகிய அந்த ஈசனை வணங்குகின்றேன்.

ஸப்த பிரானா ..... ஸப்த ஸப்த !!
அவனிடமிருந்தே (முகத்திலிருந்தே) ஏழு இந்திரியங்களும், ஏழு அக்னிகளும், ஏழு ஸமித்துகளும், ஏழு ஹோமங்களும் இவ்வேழு உலகங்களும் முதலியனயாவும் உண்டாகின்றன.

அத: ஸமுத்ரா ..... திஷ்டதேஹ்யந்தராத்மா
அவன் எல்லா பூதங்களாலும் சூழப்பட்டு, அவற்றுக்கும் அந்தர்யாமியாய் விளங்குகிறான் (முண்டோகோப நிஷத்)

அதோ தே2வா அவந்து நோயதோ விஷ்ணுர் விசக்ரமே ப்ரதி2வ்யா ஸப்த தா4மபி4 !!
யாதொரு பூமியிலிருந்து விஷ்ணு பகவான் ஏழு சந்தஸ்ஸுகளை உபகரணமாக (ஸாதனமாக) கொண்டு அளந்தருளினாரோ அந்த பூமியிலிருந்து நித்யஸூரிகள் நம்மை காப்பாற்றட்டும். தைத்திரீய சம்ஹிதையிலும், எம்பெருமான் மஹாபலியிடமிருந்து தேவர்களுக்காக உலகங்களை மீட்டு தருவதற்காக அளந்தபோது ஏழு சந்தஸ்ஸுகள் உபகாரணமாயிருந்தனவென்று உரைக்கப்பட்டுள்ளது.

ஒண் மிதியிற் ........ திருவடியென தலைமேலே
பூமியில் நின்று கொண்டு ஒரு திருவடியாலே பூமியோடு கூடிய கீழுலகங்களையும், மற்றொரு திருவடியாலே பிராணாயாமத்தில் கூறப்படும் பூமி முதலான லோகத்திலிருந்து ஸத்ய லோகம் வரையிலான ஏழு உலகங்களையும், மூன்றாவது அடிவைப்பாலே தேவலோகத்தையும், த்ரிபாத் விபூதியையும் அளந்தவனன்றோ த்ரிவிக்ரமன் (இந்திரனுடைய உலகங்களை மஹாபலியிடமிருந்து அறத்தை நிலை நாட்ட மீட்டுக்கொடுத்தான் - விஷ்ணு ஸூக்தம்)

உத்34ருதாஸி வராஹேன கிருஷ்ணேநசாதபா3 ஹூநா
நூறு கைகளையுடைய கிருஷ்ணனாகி வராஹத்தால் தூக்கப்பட்டவளன்றோ (வராஹேன)உனக்கான அவன் மாசுடம்பில் நீர் வாரமான மிலாப் பன்றியாயன்றோ பிறந்தது.

பன்றியாம் தேசு என்னும் கோல வராக மொன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய் (பரிபாடல்) என்றும் இந்த அவதாரமன்றோ எம் பெருமானுக்கு தேஜஸ்ஸைக் கொடுத்தது. (கிருஷ்ணேந) எம்பெருமான் சுவேத வராஹ ரூபியாகவே இருந்து பூமியை ஜலத்திலிருந்து எடுத்தார். அதனால் தான் நாம் வாழும் இந்த கல்பத்திற்கு சுவேத வராஹ கல்பம் என்று இன்றளவும் சங்கல்பத்தில் கூறுகிறோம். இந்த வராஹ மாதிரியான சரீரமானது அப்ராக்ருதமான சரீரம் (மின்னொளி சரீரம்). இந்த மாதிரியான சரீரத்தை உடைய கல்பத்தில் நாம் வாழும் சூரியமண்டலமானது ஸஞ்சாரம் செய்வதை வைத்துக்கொண்டு பூலோகம் தட்டையானது என்று புராணங்களில் ரிஷிகள் கூறியிருக்க வாய்ப்புண்டு.

யக்ஞோவை விஷ்ணு ..... விக்ரமதே !! (சத்பதப்ராஹ்மணம்)
விஷ்ணுவானவர் யக்ஞ ஸ்வரூபியன்றோ. அவர் தேவர்களுக்காக இந்த அடி வைப்பை செய்தருளினார். ( இத3மேவ பிரத2மேந பாஸ்பர ) அதில் முதல் அடி வைப்பாலே இந்த பூமியை அளந்தார். இது பூமிக்கு கீழுள்ள உலகங்கள் எல்லாவற்றிற்கும் உபலக்ஷணம் ( அதே23 மந்தரிக்ஷம் த்3வீதியேந ) அந்தரிக்ஷ லோகத்தை இரண்டாவது அடி வைப்பாலே அளந்தார். (அந்தரிக்ஷ லோகமானது பூலோகம் முதல் சத்திய லோகம் வரையிலான மேலான ஏழு உலகங்களை உள்ளடக்கியது). இது மேல் உலகங்களுக்கெல்லாம் உபலக்ஷணம். (தி3வமுத்தமேந) தேவலோகங்கள் ஏழையும் த்ரிபாத் விபூதியையும் பரமபதத்தையும் மூன்றாவது அடி வைப்பாலே அளந்தார்.

கேழல் திகழ்வரக்கோலமொடு பெயரிய ஊழி இருவினை உணர்த்தலின் முதுமைக்கு ஊழியாவரும் உணரா. ஆழி முதல்வ ! நிற்பேணுதும் தொழுது (பரிபாடல் - 2)

வராஹ உருவுடன் திகழ்ந்த சிறந்த கோலத்தோடு அதைப்போன்று சுவேத வராஹ கல்பம் எனப்படும் இக்கற்பத்தில் செய்த ஒரு அருஞ்செயலை மாத்திரம் உணர்த்துவதால் உன் முதுமையின் எல்லையை பல்லூழி காலத்தில் எவருமே அறியமாட்டார்கள். சக்கரத்தை தரித்த முதல்வனே! உன்னை தொழுது உனக்கு கைங்கர்யம் செய்வோம்.

வைவரல் மருப்பின் களிறுமணன் அயர்பு புள்ளி நிலனும் புரைபகல் அரிது (பரிபாடல் - 2)

கூரிய வெண்மையான தந்தத்தை உடைய வராஹம் பூமியை தூக்கி எடுத்து மணம் புரிந்த போது புள்ளி போல் தோன்றிய பூதேவி சிறிதும் துன்புற்றாளில்லை.

குன்றினின்று ....................... ஆதிதேவனல்லையே

எம்பெருமானே! திருவேங்கடமலையில் நின்றும், பரமபதத்திலேயிருந்து நீண்ட பாற்கடலிலே கண் வளர்ந்தருளி, ஒப்பற்ற மூவுலகையும் அளந்து, அதில் பூமியை வயிற்றில் வைத்து, வராஹமாய் அந்த பூமியை குத்தி எடுத்து, நன்றாய் சென்ற நாட்களிலே நல்ல உயிரான பயிர்களை படைத்து அப்போது அந்தந்த மனிதர்களுக்கு தங்கள் தங்கள் குணத்திற்கு தக்கபடி அடையத்தக்க தேவதைகளை ஏற்படுத்தி இப்படிகளாலே நம்மை செய்தருளின பரமபுருஷன் நீயன்றோ!

கீழுலகில் அசுரர்களை ...... கருவழித்த அழிப்பானூர்

பாதாள லோகவாசியான அசுரர்கள் தேவர்களோடு அடிக்கடி போர் செய்ய, எம்பெருமான் தேவர்களுக்காக அசுரர்களை அழிக்கச்செய்தும், அவர்கள் மடிக்கிடந்து கிளம்ப முடியாதபடி திருவாழி யாழ்வானை ஏவி அவ்வசுரர்களுடைய கர்ப்பம் அளவாக அழித்துப்போட்ட எம்பெருமானுடைய ஊர் திருவரங்கமே

அம்போ4நித3யே நம:
கடலுக்கடியில் பாதாளத்தில் ஆமை உருவ பீடமாக உலகையே தாங்குபவர் (இன்றளவும் கும்பாபிஷேகத்தின் போது ஆமை போன்றதொரு உருவபீடம் அமைக்கப்படுகிறது) மேலும் குருவானவர் ஆமை போன்ற வடிவமைப்புடைய ஆசனத்தில் அமர்ந்து யாகத்தை நடத்துகிறார்.

அஹம் ஹஸ்வத்த2 ரூபேண பாலயாமி ஜக3த்திரயம் ..... அர்ஹஸி
நான் அரசமரத்தின் உருவத்தில் இருந்து கொண்டு மூவுலகத்தையும் ரக்ஷிக்கிறேன். எவன் பக்தியோடு அரசமரத்தை ஆராதிக்கிறானோ அவன் என்னையே ஆராதிக்கிறான். ஆதலால், அரசமரத்தை தினமும் ப்ரத3க்ஷிணமும் நமஸ்காரமும் செய்யவேண்டும். யுதிஷ்டிரனே பசுக்களும், அந்தணர்களும், அரசமரமும் என்னுடைய உருவங்களாகும். இம்மூன்றையும் என் பக்தன் ஒரு போதும் அவமதிக்கக்கூடாது. இம்மூன்றும் என் அம்சம் உடையவை. ஆகையால் ஸம்சாரத்திலிருந்து சேதனனை கரையேற்றும்.

- வ்ருத்த கௌதம ஸ்ம்ருதி நிர்ணயம்

அஹம் ஹஸ்வத்த ஸர்வ வ்ருக்ஷானம் .... (பகவத்கீதையில் கிருஷ்ணபகவான் 10 வது அத்யாயம்). எல்லா மரங்களுக்குள்ளும் உயர்வான அரசமரம் நான்.
மஹா விஷ்ணுவின் வலது கண்ணிலிருந்து தோன்றியது அரசமரம். பகவான் இம்மரத்திற்கு அனைத்து மரங்களுக்கும் தலைமையாக இருந்து ஆட்சி புரியும் வரத்தையும் கொடுத்தருளினார். எனவே தான் இதற்கு அரசு என்ற பெயரும் உண்டானது.

மங்சாடு வரையெழுங்கடல்களேழும் .... திருக்கோவலூந்தனுர் கண்டேன்.
மேகங்கள் மேலடர்ந்து திரிகின்ற   ஏழுலக   பர்வதங்களும் ஏழு   பெருங்கடல்களும் சுவர்க்கம் முதலான ஏழு லோகங்களும் பூமியும் மற்றும் எல்லாமும் நாசமாகாமல் தன திரு வயிற்றில் ஒடுக்கி வைத்து ஒப்பற்ற ஆலின் இளந்தளிரிலே யோக நித்திரை செய்த ஆபத்சகாயனான சர்வேஸ்வரனை திருக்கோவலூரிலே கண்டேன் (ஆலிலை மேல் பாலகனாய்)

மஹா ஸங்கல்பத்தினை மேற்கொள்ளும் போது பூலோகத்தின் மேல்பாகத்தில் உள்ள ஆறு லோகங்களும் கீழே உள்ள ஏழு லோகங்களின் பெயர்களை கூறப்படுவதுடன் லவண, இஷுஸுரா, ஸர்ப்பீர், த3தி4, க்ஷீர, சுத்தோ4த்3, கார்ணவை: , பரிவ்ருதே, ஜம்பு3, ப்லக்ஷ, சாக, சால்மஸி, குச, க்ரௌஞ்ச, புஷ்கராக்ய, ஸப்தத்வீபானாம், மத்4யே ஜம்பு4த்3 வீபே என்று ஏழு லோகங்களிலுள்ள கடல்களின் பெயரையும் ஏழு உலகங்களின் பெயரையும் கூறி கடல்சாரா பகுதி ஒவ்வொன்றையும் ஒரு த்வீபமாக குறிப்பிட்டு இதில் நாம் வாழும் பூலோகமானது ஜம்பூத்வீபே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜம்பு என்பது நாவல் பழமாகும். நாம் வாழும் பூமியானது நாவல் பழ நிறத்தை அனுசரித்து உள்ளது என்றும் கூறப்பட்டுளது. விஞ்ஞானமும் சந்திர மண்டலத்திலிருந்து பூமியை பார்க்கும் போது பூமியானது சாம்பல் நிறத்தை ஒட்டியுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளது.

தெய்வீக மரங்களில் சிறப்பானது அரசு, அரசு மரத்து சமித்து (குச்சி) யாகங்களில் அக்நி வளர்க்க பயன்படுகிறது. மும்மூர்த்திகளின் வடிவமாகத் திகழும் இதன் அடியில் பிரம்மாவும், நடுவில் விஷ்ணுவும், உச்சியில் சிவனும் இருப்பதாக ஐதீகம்.

இதற்கு அஸ்வத்த விருக்ஷம் என்று பெயர். அஸ்வத்தம் என்றால் குதிரை. ஒருமுறை அக்நி தேவன் குதிரையாக மாறி அரசமரத்தில் ஒளிந்து கொண்டதால் இதற்கு அஸ்வத்தம் என்ற பெயர் ஏற்பட்டது. அரசமரத்திலிருந்து வீசும் காற்றில் ஓசோன் கலந்துள்ளதாக தற்போதைய விஞ்ஞானம் கூறுகிறது. இந்த காற்றை சுவாசிப்பதால் பெண்கள் கர்ப்பம் தரிக்கக்கூடிய வாய்ப்புண்டு என்பதால், நமது முன்னோர்கள் பண்டை காலத்திலிருந்தே குழந்தைப்பேறு வேண்டி அரசமரத்தை வலம் வரச்சொல்லியுள்ளனர் இந்த மரத்தை அதிகாலையில் வலம் வரும் போது அதன் கிளைகளில் இருந்து வெளியாகும் பிராண வாயுவில் ஓசோன் (03) அதிகம் கலந்திருப்பதாகவும், இதனால் உயிரணுக்கள் விருத்தி அடைவதாகவும் தற்போதைய விஞ்ஞானமும் ஒப்புக்கொண்டுள்ளது.

பகவானுக்கு வடபத்ரசாயி என்ற பெயருண்டு. வடபத்ரம் என்றால் ஆலிலை. சாயி என்றால் சயனித்திருப்பவன். ஆலிலையில் சயனித்திருப்பவர் என்று பொருள். உலகம் அழியும் சமயத்தில் உலகைச் சுறுக்கி தன் வயிற்றுக்குள் அடக்கி ஆலிலை மேல் சயனித்திருப்பவர் ஆவார். உண்மையில் அவரை அந்த ஆலிலை தாங்கவில்லை ஆலிலையும் சேர்த்தே பகவான் தான் தண்ணீரில் (காரிய பிரபஞ்சத்தை சூழ்ந்துள்ள ஆவரண ஜலத்தில்) மூழ்காதபடி தாங்கி காத்தருள்கிறார்.

விஷ்ணு ஸஹஸ்ர நாமாவளியிலிருந்து சில புகழுரைகள்

மஹாமூர்த்தயே நம: (உலகங்கள் அனைத்தும் தன்னுள் அடங்கும் பெரும் திருமேனி உடையவர்)

த்ருலோகத்குதே நம: (மூன்று உலகங்ளையும் தாங்குபவர்)

ஸப்த வாஹனாய நம: (ஏழு குதிரைகளுடன் கூடிய சூர்யனாய் இருப்பவர் அல்லது சூர்யனுடைய தேர்க்குதிரைகளான ஏழுசந்தஸ்ஸுகளை தனக்கு வாஹனமாக உடையவர்)

காயத்ரி மந்திர ஜபத்தின் போது கூறப்படும் ஏழு ரிஷிகளான அத்ரி, ப்ருகு, குத்ஸ, வசிஷ்ட, கௌதம, காச்யப, ஆங்கீரஸ ஆகியோரை மேலுலகு ஏழுக்கும் வாஹனமாவும் ( மேலான தேவலோகம் ஏழு ) காயத்ரி, உஷ்ணிக், அனுஷ்டுப், ப்ருஹதி, பங்க்தி, த்ருஷ்டுப், ஜகதீ என்னும் ஏழு சந்தஸ்ஸுகளுடன் கூடிய அதிஷ்டான தேவதைகள் பூமி உட்பட மனுஷ்ய லோகங்கள் ஏழுக்கும் வாஹனமாகவும் (நடுவில் உள்ள மனுஷ்ய லோகங்கள் ஏழு,) அக்நி, வாயு,அர்க்க, வாகீஸ, வருண, இந்த்ர, விஸ்வே தேவர்களாகிய ஏழு சந்தஸ்ஸுகளை அதிஷ்டான தேவதைகளைக்கொண்டு பூமிக்கு கீழுள்ள லோகங்கள் ஏழையும் (கீழான அசுர லோகங்கள்) ஆகிய ஏழு ஏழாகப்பிரியும் மின்னொளி பாதைகளில் பரவும். சூர்யனுடைய தேர்க்குதிரைகள் ஏழையும் தமக்கு வாஹனமாக உடையவர் என்றும் கூறப்பட்டுள்ளதை இங்கு அனுசந்திக்க தக்கது. ராமாவதரத்தில் ஒரு அம்பால் ஏழு மராமரங்களை துளையிட்டு வீழ்த்தியது. கிருஷ்ணவதராத்தில் ஏழு காளைகளை அடக்கியது போன்ற நிகழ்வுகளையும் தியானிக்கத் தக்கது.

ஏதாஸ்து வ்யாஹ்ருதி......................விஷ்ணே ரமித தேஜஸ:!
( ஸ்ரீ ப்3ருஹத்3 யோக3 ....................ஸ்ம்ருதி நிர்ணயம்)

ப்ராணாயாமத்தில் (பூ4:, பு4வ:, ஸுவ:, மஹ:, ஜந:, தப:, ஸத்யம் என்னும்) இந்த ஏழு வ்யாஹ்ருதிகளையும் எவனொருவன் நினைக்கிறானோ அவனால் ஏழு உலகங்களும் உபாஸிக்கப் பட்டவையாகும். (பூலோகம் தவிர மற்ற லோகங்களிலும் மனிதனை விட ஆற்றல் மிகுந்தவர்கள் வாழ வாய்ப்புண்டு) அவன் எல்லா உலகங்களிலும் இஷ்டப்படி சஞ்சரித்து, மோக்ஷமாகிற பேற்றை அடைகிறான். (உலகங்களை குறிக்கும் ஏழுடன் முடியும் இந்த வ்யாஹ்ருதி ஸப்தமானது ஜீவர்களுக்கு பதியாய் தேவ, தேவனாய் அளவற்ற தேஜஸ்ஸை உடையவனான விஷ்ணுவிற்கு பழமையான ஸரீரமாகும்) மனித ஸரீரம் ஏழு ஆதார சக்திகளை கொண்டுள்ளது.

ஸ்ரீ ப்3ருஹத்3 யோக3 ....................ஸ்ம்ருதி நிர்ணயத்தில் விஷ்ணுவே தேவ தேவனாகவும் ஸகல புவனங்களுக்கும் பதியாகவும் ஏழு வ்யாஹ்ருதிகளை ஸரீரமாக கொண்டு மூவேழு உலகங்களையும் தரித்து நிற்கிறான். ( திரிபுவனம் விஷ்ணு மீசம் நமாமி ) என்று விஷ்ணு பரத்வம் ( எங்கும் வியாபித்திருக்கும் தன்மை ) விளக்கப்பட்டது.

மேற்கூறிய மஹாவாக்யங்களில் ஏழு என்ற எண் முக்கியத்துவம் பெறுகிறது. பகவனால் போற்றப்படும் அரச இலையையும், ஆலிலையையும் ஆராய்ந்து பார்த்தோமானால் அதில் ஏழு ரேகைகள் படர்ந்துள்ளது தெரியவரும். இவை பகவானுக்கு சிறந்து விளங்கும் ராஜ பாதைகளாகும் ஒருரேகைக்கும் மற்றொரு ரேகைக்கும் இடைப்பட்ட தூரமானது தட்டை வடிவிலும் ஒரு முகப்பிலிருந்து மறு முகப்பு வரை உள்ள வடிவமானது வராஹ வடிவிலும் உள்ளது.

இதில் கீழுள்ள வடிவமைப்பிலிருந்து பூலோகம் முதலான மேல் உள்ள ஏழு லோகங்களுக்கும் சஞ்சரிக்குமிடமாக ஏழு வடிவமைப்பை கருத்தில் கொள்ள வேண்டும். சூர்யனை ப்ரதானமாகக் கொண்டு (ஒரு நீள வட்டப் பாதையில் அதாவது முட்டை வடிவில் உள்ள வட்ட பாதை) இந்த பூமியும், மற்ற கிரஹங்களும் 1000 சதுர்யுகங்கள் சுற்றி வந்து (பகவானின் கை போன்ற அமைப்பின் முடிவில்) அதாவது வராஹம் போன்ற வடிவமைப்பின் முகத்தின் விளிம்பில் இயக்கம் முடிவடைகிறது. இத்துடன் ஒரு பிரம்மாவின் பகற்பொழுது முடிவடைகிறது.

இதே போன்று இரவுபொழுது பிரம்மாவிற்கு கணக்கிடப்பட்டு, ஒரு பிரம்மாவின் பதவி காலம் முடிவடையும். பகற்பொழுது முடியும் போது பகவானின் அம்ஸமாக விளங்கும் ருத்ரனால் சம்ஹாரிக்கப்பட்டு அவற்றின் சாராம்சமானது ஆலிலை மேல் பாலகனாய் உள்ள ஸ்ரீ கிருஷ்ணரால் கிரஹிக்கப்படுகிறது. பின்பு அடுத்த பிரம்மன் பகவானால் ஸ்ருஷ்டிக்கப்பட்டு பகற்பொழுது துவங்கும் பொழுது மீண்டும் ஸகல புவனங்களும் வெளிவரத் துவங்கும் என்று உபநிஷத்துகளிலும், ஸாத்வீக புராணாங்களிலும் கூறப்பட்டுள்ளது. இலையின் வடிவமைப்பில் நடுவில் உள்ள கோடு பிரம்மாவின் பாதிப்பொழுது முடிவந்துள்ளதாக மனதில் நிலைநிறுத்தி கொள்ள வேண்டும். அந்த கோட்டை தாண்டியே ஏழு லோகங்களும் ஒரு சிறு புள்ளியாக நினைவிற் கொள்ள வேண்டும்.

இந்த ஏழு லோகங்களும், மற்றும் மேல், கீழ் உள்ள லோகங்களும் பிரளயத்தின் போது பகவான் வயிற்றில் சென்றடைவதால் இந்த சூர்ய மண்டலங்களும் நிலையானதல்ல. எனவே பரமபதம் எனப்போற்றப்படும் அழிவற்றதான சூர்யமண்டலத்தை ஆராய்வது முக்யமானது.

இனி அடுத்த அத்யாயத்தில் வேதங்களால் கணக்கிடப்படும் மற்றொரு சூர்யமண்டலத்தை பற்றி ஆராய்வோம்.

MahaVishnu

 
Copyright © 2020 - 2025. Powered by LAKE consulting Services.