ஸ்ரீவிஷ்ணு தத்வ மஹிமை - பாகம் II

8-வது அத்யாயம்
( திரிபாத் விபூதியும், பரமபதமும் பற்றிய விளக்கம் )
ஓம் தத்3 விஷ்ணோ: பரமம் பதம் ஸதா3 பச்யந்தி ஸூரய !
திவீவ சக்ஷூராததம்! தத்3 விப்ராஸோ விபந்யவோ!!
ஜாக்3 ருவாம்ஸஸ் ஸமிந்த4தே! விஷ்ணோயார்த் பரமம் பதம்!!

பொருள் : விஷ்ணுவினுடைய அந்த மேலான பரமபதத்தை நித்யஸூரிகள் எப்போதும் காண்கிறார்கள், அந்த பரமபதமானது எங்கும் ஒளியால் வியாபித்திருப்பவனும் ஸகல புவனங்களுக்கெல்லாம் கண்ணாக இருப்பவனுமான சூர்யன் போல் பிரகாசமுள்ளது. அதில் மேதாவிகளும் துதிப்பதையே தொழிலாகக் கொண்டவர்களுமான நித்யஸூரிகள் எப்போதும் விழிப்புடன் விளங்குவார்கள்.

இங்கு பரமம்பதம் என்றதினால் விஷ்ணுவுடைய இந்த ஸ்தானமானது இதுவரை முன் அத்யாயங்களில் கூறப்பட்டுள்ள சூர்யர்களை காட்டிலும் மிகவும் உயர்ந்ததென்று விளங்குகிறது. உண்மையில் கோடி சூர்ய பிரகாசத்தை காட்டிலும் விஞ்சியிருப்பது. என்று சாஸ்திரங்களில் பரமபதம் கோஷிக்கப்படுகிறது. மேலும் இந்த மந்திரமானது ருக், யஜூர், ஸாம வேதம் ஆகிய மூன்றிலும் படிக்க படுவதொரு மந்திரமாகும்.

நமோ நாராயணாய என்று பல்லாண்டும் பரமாத்மனை சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே என்று விஷ்ணு சித்தர் இவ்வாக்கியத்தை விளக்கியிருக்கிறார்

இந்த சூர்யமண்டலமே மிகவும் மேலானாது அதில் திவ்ய புருஷனான ஸ்ரீமந் நாராயணன் சங்கு, சக்ர, கதாதாரிகளுடன் கூடிய திவ்ய மங்கள திருமேனியுடன் எழுந்தருளி உள்ளார். அவரே ப்ரக்ருதி மண்டலத்திற்கு மேற்பட்டவராயும், சுத்தஸத்வமயமான மூலப்ரக்ருதியை ஸரீரமாகக் கொண்டிருப்பவராயும், அநேக கோடி ப்ரஹ்ம அண்டங்களை தனது மூலப்ரக்ருதியில் தாங்கிக் கொண்டிருப்பவராயும் (விளக்கம் 6 மற்றும் 7 வது அத்யாயங்கள்) கால, தேச, வர்த்தமானம், எனப்படும் மூன்று வித அளவிற்கும் அப்பாற்பட்டவராயும், நிலையானதாயும், அசையாததாயும், அழிவற்றதாயும், ஸங்கல்பத்தாலேயே ஸகல புவனங்களையும் படைப்பவராயும், வ்யக்தமான (வெளிப்பாடு உடைய) லோக ஸரீரகனாகவும்

அவ்யக்தமான (வெளிப்பாடற்ற) மூலப்ரக்ருதிக்கு ஸரீரனாகவும் உள்ளார் என்று வேதங்களிலும், உபநிஷத்துகளிலும் கூறப்பட்டள்ளது. அதில் முக்கியான உபநிஷத் வாக்கியங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவை திரிபாத் விபூதிக்கும் அதற்கு மேலாக உள்ள பரமபதத்திற்கும் பலம் சேர்க்கக்கூடியதாயுள்ள (மேலான வளத்தை பெறுவதற்கான) மஹா வாக்யங்களாக கருதப்படுகின்றன.

1. ஏகோஹவை நாராயண ஆஸீத்., நப்3ரஹ்ம., ந ஈஸாந

- மஹோபநிஷத்

ஸ்ருஷ்டிக்கு முன் நாராயணன் ஒருவர் மட்டுமே இருந்தார் அப்போது பிரம்மனுமில்லை, ஈஸனுமில்லை (தான் தானகவே உண்டாகியவராயும்) சூர்ய மண்டலமாகிய பரமபதத்தில் வசிக்கும் பரமபுருஷராயும் உள்ளார்)

2. ய ஏஷோ அந்தராதி3த்யே ஹிரண்மயோ புருஷோ த்ருச்யதே

- ஸாந்தோக்ய உபநிஷத்

சூர்ய மண்டலத்தில் நடுவில் ஸுவர்ணம் போன்று அழகிய புருஷன் ஒருவன் காணப்படுகிறான்.

3. புருஷோ நாராயண., பூத4ம் ப4வ்யம் ப4விஷ்யச்ச ஆஸீத் !
    ய ஏஷ ஸர்வேஷாம் மோக்ஷத3ச்ச ஆஸீத் !

- ஸாந்தோக்ய உபநிஷத்

புருஷனாகிய நாராயணன் சென்றவைகளும், வருபவைகளும், இருப்பவைகளுமாகிறார். அவர் எல்லோருக்கும் மோக்ஷத்தை கொடுப்பவராகவும் உள்ளார்.

4. நாராயண பரப்3ரஹ்ம! தத்வம் நாராயண: பர:!
    நாராயண பரோஜ்யோதி! ஆத்மா நாராயண: பர:!

- நாராயண ஸுக்தம்

நாராயணனே ப்ரப்ரஹ்மம்! நாராயணனே பரதத்வம்!
நாராயணனே மேலான ஜோதி! நாராயணனே பரமாத்மா !

5. நைவேஹ கிஞ்சந அக்ர ஆஸீத் அமுலம் அநாதரா இமா:
    ப்ரஜா:ப்ரஜாயந்தே! தி3வ்யே தே3வா ஏகோ நாராயணா

- ஸூபால உபநிஷத், 6வது காண்டம்

முதலில் இங்கு ஒன்றும் இல்லை, பரமபதத்திலிருக்கும் நாராயணன் ஒருவனிடமிருந்தே இவை உண்டாகின்றன. அவனைத்தவிர இவைகளுக்கு வேறு காரணமும் கிடையாது.

6. புருஷாந் ந பரம் கிஞ்சித் ஸா காஷ்டா ஸா பரக3தி

- கடோபநிஷத்

புருஷனை காட்டிலும் மேலானதில்லை, அவனே மேலான உபாயமாகவும், உபேயமாகவுமாயிருக்கிறார்.

7. தப: ச்ரத்3தே4கீயே .......................ஸ புருஷோ ஹ்யவ்யயாத்மா!

- முண்டகோபநிஷத்

தப: ஸப்தத்தினால் சொல்லப்படும் ப்ரஹ்மத்தையும், அவனிடம் பக்தியையும், ஞானத்தையும் கொண்டு எவர்கள் உபாஸிக்கிறார்களோ அவர்கள் சூர்யமண்டலத்தின் நடுவில் சென்று (பாபமற்றவர்களாய்) அழிவற்ற திவ்ய மங்கள விக்ரஹத்தை உடைய புருஷன் வஸிக்கும் பரமபதத்தை அடைகிறார்கள்.

8. ஹிரண்மயே பரகோச.................................விதோ4 விது3!
    அதச சோர்த்4வம் ......................................வரிஷ்ட2ம்!!

- ஸூபால உபநிஷத், 6வது காண்டம்

பொன்மயமான மேலான ஸ்தானத்தில் ரஜஸ், தமோ குணங்களற்றதும், சோதிகளுக்கெல்லாம் சோதியாயிருப்பதும், ஸ்வயம் பிரகாசமானதும், ஆத்மா ஞானிகளால் அறியப்படுவதுமான பரப்ரஹ்மம் இருக்கிறது. அழிவற்ற அந்த பரப்ரஹ்மத்தை பின்பற்றியே மற்ற அனைத்தும் ஒளிவிடுகின்றன. அந்த பரப்ரஹ்மமே மேலும், கீழும், வடக்கும், தெற்கும், கிழக்கும், மேற்கும் எங்கும் வியாபித்துள்ளது. (சூர்யன் தனது கிரணங்களாலே வியாபிப்பது போல்) இந்த புவனங்கள் அனைத்தும் மேலான பரப்ரஹ்மமாகவே இருக்கிறது.

9. பரமம் புருஷம் திவ்யம்...........ஆதித்ய வர்ணம் தமஸ: பரஸ்தாத்

- முண்டகோபநிஷத்

பார்த்தனே! ஸர்வஜ்ஞனாகவும் பழைமையானதாகவும், உலகை நியமிப்பவராகவும் அணுவாகிய ஜீவாத்மாவை காட்டிலும் அணுவாயிருப்பராகவும், எல்லாவற்றையும் தரிப்பவராகவும், நினைக்க அரிதான உருவத்தை உடையவனாகவும், ஆதித்ய வர்ணனாகவும், தமஸ்ஸுக்கு (மூலப்ரக்ருதிக்கு) மேற்பட்டவனாகவும் விளங்கும் என்னை எவன் நினைப்பானோ அவன் மேலான திவ்ய புருஷனான என்னை தியானித்துக்கொண்டு என்னை அடைகிறான். என்று தன் விஷயமாக பகவத்கீதையில் கிருஷ்ணன் விவரித்து அருளினார்.

10. த்4யேயஸ் ஸதா3....................த்4ருதை சங்க2சக்ர:!

- ஆக்நேய நரஸிம்ம புராணம்

சூர்யமண்டலத்தில் நடுவில் இருப்பவனாய், மேலான ஸ்தானத்தில் எழுந்தருளி இருப்பவனாய், தோள்வளை, மகர குண்டலம், கிரீடம் ஆகியவற்றை உடையவனாய், ஸுவர்ணமயமான புருஷனாய், திருமேனியை உடையவனாய், சங்கு, சக்கரங்களை தரித்திருப்பவனுமான நாராயணன் எப்போதும் தியானிக்கத்தக்கவன்.

11. வேதா3ஹ மேதம் புருஷம் மஹாந்தம் !
     ஆதி3த்யவர்ணம் தமஸஸ்து பாரே !!

- புருஷ ஸூக்தம்

தமஸ் எனப்படும் மூலப்ரக்ருதியின் மேலே எழுந்தருளி இருப்பவராய் ஆதித்யவர்ணனாகிய இந்த மஹாபுருஷனை நான் அறிவேன்.

12. காலம் ஸ பசதே தத்ர ந காலாஸ்தத்ரவை ப்ரபு4

- விஷ்ணு புராணம்

அந்த பரமபதத்தில் அவன் (ஸங்கல்பத்தாலேயே) காலத்தை நியமிக்கிறான். அங்கு காலம் ஸாம்ராஜ்யம் செலுத்துவதில்லை (காலத்துக்கு கட்டுபடாதவன் என்கிறபடி.)

13. பரமம் ப்ரபு4ம் நாராயணம்

- தைத்திரீய நாராயணவல்லி

மிக உயர்ந்த தலைவன் நாராயணன்

14. ஓம் நாராயணாயயேதி மந்த்ரோபாஸகோ வைகுண்ட2 பு4வனம் க3மிஷ்யதி

- அதர்வ வேதம்

ஓம் நமோ நாராயணாய என்னும் மந்திரத்தை உபாசிப்பவன் வைகுண்ட லோகத்தை அடைகிறான்.

15. ஏழு கிரகணங்களை உடைய சூர்யனே! பலவர்ணமுடைய மயில்
     தோகை அணிந்தவனே! ஒற்றைகொம்புடைய மஹாவராஹப்
     பெருமானே! அடியாரை நழுவ விடாத அச்யுதனே! மூவுலகை அளந்த
     அனந்தனே! பெரும்பலனை (மோக்ஷத்தை) அளிக்கும் புருஷனே!

- விஷ்ணு ஸ்ம்ருதி நிர்ணயம்

16. பேரொளியை உடைய ஆதித்யனுடைய மண்டலத்தில் எல்லா உலகிற்கும் ஆத்மாவானவன். புருஷன் எனப்படுபவராய் பொன்மயமான மீசை, முடி, நகம் ஆகியவற்றை உடையவனாய் பத்மாஸனத்தில் வீற்றிருப்பவனாய், மலர்ந்த தாமரை போன்ற திருமுகத்தை உடையவனாய், சங்கு, சக்ர, கதாதாரிகளுடன் கூடியவனாய், எல்லா உலகையும் ஒளிவிட செய்பவனாய், உலகிற்கு ஒரே சாக்ஷியான பரமாத்மாவை தியானிப்பது உயர்ந்ததாகும், இது மோக்ஷத்திற்கு வழி வகுக்கும். இத்தகைய பரமபுருஷனை புருவங்களின் நடுவில் அந்தராத்மாவாய் ஒளிமயமானவராய், ஸர்வகாரணனாய், தவத்தின் மூலமும், அஷ்டாக்ஷர மந்திரமான ஓம் நமோ நாராயணாய என்று ஜபத்தை செய்து தியானிக்க வேண்டும்.

- வியாச யாஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதி நிர்ணயம்

17. தமஸ் எனப்படும் மூலப்ரக்குதிக்கு மேல் சுத்த ஸத்வமயமாய் பொன் போலே மிக அழகியதாக விளங்குவதாய், ப்ரளயம் முதலான தொல்லைகள் அற்றதாய் அனைத்திலும் உயர்ந்ததாய் எப்போதும் பேரானந்தத்தை விளைவிப்பதான பரமபதம் என்ற ஸ்ரீ வைஷ்ணவ லோகத்தை சிந்தித்து மோக்ஷத்தை அடைய வேண்டும்.

- நித்ய விபூதி சிந்தனம்

18. ஸ்ரீ ஸூர்ய நாராயண ப்ரீதியர்த்தம் அர்க்4ய ப்ரதா3நம் கரிஷ்யே
    இதி ஸங்கல்ப அர்க்4ய ப்ராதன மந்த்ரஸ்ய ஸவித்ரு ப43வான் ரிஷி:
    அனுஷ்டுப்ச2ந்த: ஸ்ரீ ஸூர்ய நாராயண தே3வதா !!
"ஸ்ரீ ஸூர்ய நாராயணின் ப்ரீதியின் பொருட்டு அர்க்4ய ப்ரதானம் செய்கிறேன் என்று ஸங்கல்பித்து அர்க்4ய ப்ரதான மந்திரத்திற்கு ஸூர்ய ப43வான் ரிஷி, அனுஷுடுப் சந்தஸ், ஸ்ரீ ஸூர்ய நாராயணன் தே4வதை என்று அனுசந்திக்க வேண்டும்" என்று ஸூர்யனுக்கு அந்தர்யாமியான ஸூர்ய நாராயணனே (ஸூர்ய மண்டலமான பரமபதத்தில் எழுந்தருளியிருக்கும் ஸூர்ய நாராயணனே) ஸந்த்3யா வந்த3னத்தின் போது அர்க்4ய ப்ரதா3னத்தால் உகப்பவன் என்று காட்டப்பட்டது.

- (விஸ்வாமித்ரஸ்ம்ருதி நிர்ணயம்)

19. விண்மீதிருப்பாய்! மலைமேல் நிற்பாய்! கடற் சேர்ப்பாய்!
    மண் மீதுழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்துருகுவாய்!
    என் மீதியன்ற புறஅண்டத்தாய் ! என தாவி
    உன் மீதாடி உருக்காட்டாதே ஒளிப்பாயோ !
பரமபதத்தில் இருக்கும் எம்பெருமானே! நீ திருமலை மேல் நின்று காட்சி தருகிறாய் ! திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளாய்! இவ்வுலகில் வெவ்வேறு அவதாரங்களை எடுத்து எங்களுடன் உழல்வாய் ஆயினும் யாரலும் காண முடியாத படி எல்லா பொருள்களிள்ளும் மறைந்து வாழ்கிறாய், எண்ணத்திற்கு அப்பாற்பட்ட எண்ணில் அடங்காத அண்டங்களுக்குள் ரக்ஷகனாய் உள்ளவனே நீ என் நெஞ்சிற்குள் இடைவிடாமல் குறைவர சஞ்சரிக்கிறாய். என்றாலும் என் கண்களுக்கு உன் உருவத்தை காட்டாமல் ஒளிந்து மறைகிறாயே இப்பாசுரத்தில் நம்மாழ்வார் எம்பெருமானின் ஐந்துநிலைகளை பற்றி பேசுகிறார்.

20. பகல் கண்டேன் நாராயணனை கண்டேன் கனவில்
    மிகக்கண்டேன் மீண்டவனை மெய்யே மிக்கண்டேன்
    ஊன் திகழும் நேமி யெளிழிதிக்கும் செவடியான்
    வான் திகழுந் சோதி வடிவு
இரவு கலவாத ஒரே பகலாக செல்லுகின்ற நல்விடிவை கண்டேன் அதற்கு அடியாக மறையாத சூர்யனாகிய ஸ்ரீமந் நாராயணனை கண்டேன். மீன்டும் மனத்திற் காண்பதை காட்டிலும் மிகவும் தெளிவாக அவனைக் கண்டேன். திருமேனியில் விளக்கும் திருவாழியை உடையவனும் ஒளிமிக்க திருவடிகளை உடையவனுமான அப்பெருமானுடைய பரமபதத்தில் விளங்குகிற ஜோதி மயமான திருமேனியை நன்கு காணப்பெற்றேன்.

21. சினமா மதகளிற்றின்...........பேரார்வமானவர் ஒரகலத்துள்ள உலகு
....பெரிய ஆரங்கள் கொண்ட திருமார்பை உடையவனுமான எம்பெருமான் உடைய சங்கல்ப ரூபமான ஞானத்தின் ஒரு சிறுபகுதியில் உலகங்கள் எல்லாம் நிலைபெற்றுள்ளன.

22. கஸ்மாச்ச தேந...........................மநந்த ரூப

- பகவத் கீதை (11ம் அத்யாயம்)

ஹே மஹாத்மாவே! பிரம்மாவுக்கும் ஆதிகர்த்தாவும் சிரேஷ்டனுமான உன்னை எப்படி வணங்காமலிருக்க முடியு முடிவில்லாதவனே! தேவர் கோனே! ஜகந்நாதனே! நீ ஸத், அஸத் என்பவைகளை காட்டிலும் உயர்ந்ததான அழிவில்லாத பரம் பொருள்!, நீ ஆதிதேவன்! புராண புருஷன்! ஸகல புவனங்களையும் தாங்கும் உயர்ந்த ஆதாரம்!, எல்லாம் அறிந்தவன்!, அறியத்தகுந்தவன்!, பரமபதத்தோன்!. எண்ணிலா வடிவம் கொண்டவனே! இந்த உலகமனைத்திலும் நீ பரவியிருக்கிறாய்.

23. ப்ரஹ்மஜ்ஞானம் ப்ரக்ஷம்...................... மஸதச்ச விவ

- மஹா நாராயண உபநிசத்

ஆதியில் பரப்ரஹ்மமாகிய முதல்வனும், ஒளிமிக்கவனும், உலகின் எல்லை வரை பிரகாசிப்பவனும் ஆகிய வேனன் (ஸூர்யன்) எங்கும் நிறைந்திருக்கிறான். வானுலகையும் அவன் பிரகாசிப்பிக்கிறான். தன்னைப் போன்ற உருவங்களை எங்கும் புகுத்துகிறான். காரிய பிரபஞ்சமாகிய இந்த லீலா விபூதியும் காரண பிரபஞ்சமாகிய மூலப்ரக்ருதியும் உதிக்குமிடமாக அவனே விளங்குகிறான்.

24. த்ரி பாத் ஊர்த்வ ........................ஸாசநாந சநேஅபி4

- புருஷ ஸூக்தம்

புருஷனானவன் பரமபதத்தில் (வாஸுதேவ, ஸங்கர்ஷண, ப்ரத்யும்நர்) மூன்று வியூஹங்களை உடையவனாகி ஸங்கல்பித்தான். அவனுடைய அநிருத்தன் என்னும் நான்காவது வியூகம் இவ்வுலகில் (திருப்பாற்கடலில்) அவதரித்து அதற்கு பின் உயிர்களின் நன்மைக்காக உலகெங்கும் அவதாரங்களாக வியாபித்தான் என்னும் புருஷஸூக்தத்தின் நான்காவது மந்திரத்தில் தன் ஸங்கல்பத்தாலே உலகெங்கும் அவதரித்தபடியை காட்டுகிறது.

25. ஸவா ஏஷா புருஷ பஞ்சதா4

- தைத்திரிய நாராயண வல்லி

(இந்த பரமபுருஷன் ஐந்து நிலைகளை உடையவன்) என்று கூறி இவனுக்கு பரம், வியூஹம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்ற ஐந்து நிலைகள் உள்ளனவென்பது உணர்த்தப்பட்டது. பரநிலையானது அவதாரங்களுக்கெல்லாம் மூலமான பரவாஸுதேவ விக்ரஹம் இதுவே தி3வி திஷ்ட2த் யேக (பரமபதத்தில் ஒருவன் எழுந்தருளி உள்ளான். மற்றைய மூன்று நிலைகள் இதிலிருந்த பிரிந்த அவதார விக்ரஹங்கள் அவற்றிலே ஸங்கர்ஷணன், ப்ரத்யும்நன், அநிருத்தன் ஆகிய மூன்று வியூஹ நிலைகள் என்று புருஷஸூக்தம் காட்டிற்று. புருஷஸுக்தத்தை விவரிக்கும் முத்கலோபநிஷத் இந்த வியூஹத்தை அநிருத்த நாராயணன் என்றது. அம்ப4ஸ்ய்பாரே., ஸமுத்ரேந்தம் முதலான வேத வாக்யங்களும் இந்த வியூகத்தை காட்டின.

26. எம்பெருமானுடைய அளவற்ற லீலாரஸத்தை விளக்கும் பூமிக்கு கீழுள்ள ஏழு உலகங்கள்; பூமி முதலாகவும், ஸத்ய லோகம் வரையில் உள்ள ஏழு உலகங்களும்; மேலுள்ள உலகங்களாகிய தேவர்கள் வாழும் ஏழு உலகங்களும் (மூவுலகு) அதற்கும் மேலான உலகமாகிய திருப்பாற்கடல் வரையில் உள்ள இந்த ப்ராக்ருதமான லீலா விபூதி நித்ய முக்தர்கள் அவனை என்றும் அனுபவித்து வாழ்கின்ற அப்ராக்ருதமான நித்ய விபூதி ஆகிய இரண்டும் விபூதித்ரவ்யமாகும்.

27. அச்யுதம் த்4ருவம் விஷ்ணு ஸம்ஞ்யம்...............................பபர்யாதி

- (மைத்ராயணியம்)

ஸூர்ய, சோம, அக்னி, ஸத்வமண்டலங்களை பிளந்து கொண்டு போய் அதற்கு பின் சுத்த ஸத்வத்தின் உள்ளிருப்பதாய், அசையாததாய், (அடியார்களை) நழுவவிடாத அச்யுதன் எனப்படுவதாய் விஷ்ணு எனும் பெயரை உடையதான பரம்பொருளை பார்க்கிறான்.

28. அளவற்றதான நித்ய விபூதி அளவற்ற லீலா விபூதியை விட மும்மடங்கு பெரியது. அதாவது எல்லையற்றதான இந்த லீலாவிபூதி புருஷோத்தமனுக்கு ஒரு பாதம். எல்லையற்றதான நித்ய விபூதி மூன்று பாதம். 1. ஸங்கர்ஷனன் 2.ப்ரத்யுமனன் 3. அநிருத்தன்

இந்த அத்யாயத்தில் திருப்பாற்கடலுக்கு மேல் உள்ள த்ரிபாத் விபூதி பற்றியும் அதற்கு மேலும் உள்ள பரமபதநாதனும் புருஷன் எனப் போற்றப்படுவபவருமான ஸ்ரீமந் நாராயணன் சங்கு, சக்ர கதாதாரிகளுடன் கூடியதாயும், திவ்ய மங்கள திருமேனியும் (விக்ரஹம்) கொண்டவராயும், ஸகல ஜீவாத்மாக்களுக்கும் அழியாத்தனமையாகிய பேரின்பமாகிய மோக்ஷத்தை அளிக்க வல்லவர் எழுந்தருளியுள்ள பரமபதத்தை பற்றி வேதங்களில் கூறப்பட்டுள்ள வேதவாக்யங்களில் பக்தர்கள் ஆழ்ந்த தியானத்தின் மூலம் அறிந்து கொள்ள வேண்டும் (இந்த அத்யாயத்தில் கூறப்படும் புருஷனாகிய ஸ்ரீமந் நாராயணனது மஹிமைகளை விளக்கும் சில புகழுரைகள் விஷ்ணு ஸஹஸ்ர நாமாவளியிருந்து)

29.         1)  ஸ்வயம் பு4வே நம: தான் தானாகவே உண்டாகியவர்
2) ஆதி3த்யாய நம:   (மேலான)  சூர்ய  மண்டலமாகிய    பரமபதத்தின் நடுவே இருப்பவர் உருக்கிய தங்கம் போலே திகழ்பவர் (த்யேய ஸதா ஸவித்ரு மண்டல மத்யவர்த்தி நாராயண ஸந்த்யாவந்தனம்)
3) த்ரி ககுப்தா4ம்னே நம:  ( மேல்,   கீழ்,   நடுவாகிய )  மூன்று   உலகங்களுக்கும்   இருப்பிடமானவர், லீலாவிபூதியை காட்டிலும் மும்மடங்கு பெரியதான த்ரிபாத் எனப்படும் நித்ய விபூதியை உடையவர்.
4) ஜ்யேஷ்டாய நம : அனைத்திற்கும் முதன்மையானவர் பூர்வயோ தே3வோப்4யோஜாத தேவர்களுக்கு முன் உண்டானவர்.

5) ச்ரேஷ்டாய நம: அனைத்திற்கும் மேலாகியவர் ( பிரம்மஸூத்ரத்தில் விளக்கியபடி எல்லாவற்றுக்கும் காரணமாயிருப்பதால் ஜ்யேஷ்டர். எல்லாவற்றையும் கடந்து மேலாயிருப்பதால் சிரேஷ்டர்.)
6) ஈஸ்வராய நம: ஸர்வசக்தி உள்ளவர் ( ஆக்கவும், காக்கவும், அழிக்கவும் மாற்றவும் வல்லமை பொருந்தியவர் )
7) அனுத்தமாய நம: தமக்கு மேற்பட்டவர் இல்லாதவர்
8) ஆத்மவதே நம: தமக்கு வேறு ஆதாரமின்றி தம் மஹிமையே தமக்கு ஆதாரமாக கொண்டவர்.
9) விஸ்வரேதஸே நம :   உலகிற்கு வித்தாகியவர் ( ஒப்பம்;  எல்லா  கருப்பைகளிலும்  எந்தேந்த உருவங்கள் பிறக்கின்றனவோ அவைகட்களுக்கெல்லாம் மஹத் எனும் பெரும் பிரக்ருதியே பிறப்பிடமாகிய க்ஷேத்ரம் அல்லது தாய். நானே கர்ப்பதானம் செய்யும் தகப்பன் (கீதை 14-4)
10. அம்ருதாய நம  :   அழிவில்லாதவர்.   ( பக்தர்களுக்கு  அழியாத்தன்மையாகிய    மோக்ஷத்தை அளிப்பவர் ) ஆராத அமுதமானவர்.
11. காமதே3வாய நம: தர்ம, அர்த்த, காம, மோக்ஷமாகிய நான்கு புருஷார்த்தங்களையும் அளிப்பவர்.
12. லோகாத்யக்ஷாய நம: அனைத்து புவனங்களையும் மேற்பார்வையிடுபவர்.
13. க்ருதாத்ராய நம: காரியமாகவும்,காரணமாகவும் இருப்பவர்
14. விஷ்வயோநயே நம: உலகனைத்தும் உதிக்குமிடமாய் கொண்டவர் ( ஸகல உலகங்களாகவும் அவற்றின் காரணமாகவும் ஆகியவர் )
15. வேத்யாய நம: (மோக்ஷத்தில் விருப்பமுடையவர்களால்) அறியக்கூடியவர்
16. வர்த்தமானாய நம: பிரபஞ்ச ரூபமாக தாமே வளர்பவர் (நிற்பதெல்லாம் நெடுமால்)
17. விவிக்த்யா நம: பிரபஞ்ச ரூபமாயிருந்தும் ஒன்றிலும் சேராமல் தனித்து நிற்பவர்.
18. துர்த்தராயே நம: எல்லாவற்றையும் தாங்குபவராய், தான் வேறோருவரால் தாங்கப்படமாலிருப்பவர்.
19. ப்ரதா4ன புருஷேஸ்வர :    மூலப்ரக்ருதிக்கும்    அதில்     கட்டுண்ட   ஜீவர்களுக்கும் தலைவர்.
20. மனு: ஸங்கல்பத்தாலே தன் நினைவின் சிறுபகுதியிலிருந்து காரணமாகிய மூலப்ரக்ருதியையும் காரியமாகிய பிரபஞ்சத்தையும் (லீலாவிபூதியையும்) படைப்பவர்.
21. ப்ரபூ4த: உலகமே அழிந்த போதிலும் நிலையான வைகுந்த செல்வத்தால் நிரம்பியவர்.
22. சதுராத்மா:  வாஸுதேவர்,  ஸங்கர்ஷனர்,  ப்ரத்யும்நர்,  அநிருத்தர்  என்று நான்கு உருவங்கள் உடையவர்.
23.நாராயணாய: உண்டானவற்றுக்கெல்லாம் உறைவிடமாகியவர், (நர எனப்படும் ஆத்மாவிடமிருந்து உண்டானவை எல்லாம் நாரணி எனப்படுகின்றனர் அவைகட்கு அயனம் இருப்பிடமாதலால் நாராயணன் எனப்படுகிறார்.)
24. நிவ்ருத்தாத்மா: ப்ரக்ருதியை காட்டிலும் மும்மடங்கு பெரியதான நித்ய மண்டலத்தை உடையவரானபடியால் மிகச்சிறந்த ஸ்வரூபமுடையவர்.
25. ஸரீரப்4ருதீதநம: தமக்கு சரீரம் போன்ற பக்தர்களை காப்பவர்
26. பரார்த்தயே நம: கல்யாண குணங்களால் நிரம்பியவர், சிறந்த ஐஸ்வர்யம் உடையவர்
27. வைகுண்டாய நம:   பக்தர்களை  தன்னை  விட்டு  விலகாமல்  தன்னிடம் சேர்த்துக்கொள்பவர்.
28. புருஷாய நம: எல்லாவற்றிற்கும் முன்னாலிருப்பவர் உடல் தோறும் ஆத்மாவாக உறைந்திருப்பவர் எல்லாவற்றிக்கும் மேலான சூர்ய மண்டலத்தில் வீற்றிருப்பவர்.
29. க்ருதலக்ஷணாய நம: முக்தியடையதக்கவர்களுக்கு தாமே (சங்கு, சக்கர சின்னத்தை) அடையாளமிட்டிருப்பவர்.
30. கபஸ்திநேமயே நம: ஸூர்ய மண்டல வடிவினர் (த்4யேய ஸதா3 ஸவித்ரு-மண்ட3ல-மத4யவர்ததீ நாராயண:- ஸந்தியா வந்தனம்)
31. ஆநந்தாய நம: எல்லையற்ற ஆனந்த வடிவினர்.
32. அச்யுதாய நம: தமது ஸ்தானத்திலிருந்து சற்றும் வழுவாதவர், ஆதலால் அச்யுதர்
33. ப்ரஹ்மனே நம:   பிரம்மம்   எனப்படும்   பரம்பொருளாகியவர்.   (ஸத்யம் - ஞானம் - அனந்தம் - ப்ரஹ்ம - இதிச்ருதே)
34. தீப்தமூர்த்தயே நம:   உலகில்  ஒளிபடைத்த  அனைத்தையும்  தன்திருமேனியில் அம்ஸமாக உடையவர்.
35. ஏகஸ்மே நம: (தன் பெருமையில் தனக்கு சமமானவர் யாருமில்லை யாதலால்) ஒன்றேயாகியவர் (எல்லாவகையிலும் ஒப்பில்லாத பகவானை யாருடனும் சேர்த்து எண்ணக்கூடாதாகையால் ஒருவர் என்று சொல்வது பரிபாடல்) எனக்கு சமமானவர் யாருமில்லை. என்னைவிட மேலானவர் யாருமில்லை. என்னை முழுவதுமாக அறிந்தவரும் யாருமில்லை - பகவத்கீதை
36. ஹேமாஸ்நாயே நம:    பொன்மயமான  அங்கங்களை  உடையவர்  (ஸயேஷா அந்தராதித்யே ஹிரண்மய: புருஷ (சாந்தோக்ய உபநிஷத்) பொன்மயமானது என்பது ஸுத்த ஸத்வத்தை குறிக்கும்.
37. அசலாய நம: அசைவற்றவர் (ஸ்வரூபமும், சக்தியும், குணாம்சமும் எப்போதும் மாறாமலிருப்பவர்.
38. ஸஹஸ்ரார்ச்சிஷே நம: ஆயிரங் கிரகணங்களை உடையவர் (வானத்தில் ஆயிரம் சூர்யர்களின் பிரகாசம் ஒரே சமயத்தில் ஒன்றாக கூடி உதிக்குமானால் அது அந்த மஹாபுருஷனுடைய ஒளிக்கு சமமாக இருக்கும் - (பகவத் கீதை 11-12)
39. ஜ்யோதிஷே நம: தாமாகவே பிரகாசிப்வர்
40. ஸநாந் நம: அனாதியான காலரூபியாயிருப்பவர்
41. ப்ரணவாய நம: ஓம்காரப்பொருளாயிருப்பவர்
42. தத்வாய நம:   பரம்பொருளாகியவர்  (தயிரிலும்,  பாலிலும்   திரண்ட    வெண்ணையப்
போல் சேதனாசேதங்களாகிய பிரபஞ்சத்தில் வியாபித்திருக்கும் ஸாரம்ஸமாயிருப்பவர்.) (ஸ்ரீ பட்டர் பாடம்)

43. யக்ஞஸாதனாய நம: யாகங்களை தம்மை அடையும் ஸாதனமாக காட்டுபவர்.
44. அக்ஷராய நம: அழிவற்றவர்
45. ஸமாய நம: எக்காலத்தும் மாறுபாடற்றவர்
46. புஷ்டாய நம: எப்போதும் பூர்ணமானவர்
47. ஸித்தமாய நம: எல்லோரும் சென்றடையும் இடமாகவும், மிகவும் உயர்ந்தவராகவுமிருப்பவர்.
48. மஹா தேஜஸே நம: சூரியன் முதலானவர்களுக்கும் ஒளியை கொடுக்கும் சிறந்த ஒளியுள்ளவர். ஜோதிகளுக்கெல்லாம் மேலான ஜோதியாயிருப்பவர்.

த்ரிபாத் விபூதியின் அம்சமாக கருதப்படுபவை:-

I எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனின் திருவடி பதித்த மூன்று அடுக்குகளை கொண்ட ஷடாரி
II த்ரிபுவனம் விஷ்ணு மீஸம் நமாமி மூவேழ் உலகங்களையும் ஸரீரமாகக்கொண்ட (மூன்று அடுக்குகளானது மூஉலகங்களுக்கும் பிரமாணமாகக் கொள்ளலாம்) விஷ்ணுவிற்கு நமஸ்காரம்
III முக்காலி மீது அமர்ந்து மணப்பெண்ணின் கழுத்தில் திருமாங்கல்யம் (மூன்று முடிச்சாக) கட்டும் விஷ்ணுஸ்வரூபமாக கருதப்படும் மணமகன்
IV ஓம் நமோ நாராயணாய என்ற மூன்று பதங்களை கொண்ட விஷ்ணுவின் அஷ்டாக்ஷர மந்திரம்
V அ,உ,ம, என்ற முன்று எழுத்துக்களை கொண்ட பிரணவமாகிய ஓம்காரமாக பிரதிபலிப்பதாகவும் கொள்ளலாம் (அகாரமாகிய விஷ்ணுவை மகாரமாகிய ஜீவன் அடைவதற்கு உகாரமாகிய லக்ஷ்மியின் திருவருளைப்பெற வேண்டும்)
VI ருக், யஜுர், ஸாம, ஆகிய மூன்று வேதங்களின் சாரமாகத்திகழும் பூ, பு4வ, ஸுவ, என்ற மூன்று வ்யாஹ்ருதிகள்
VII மூன்று அடுக்குகளை கொண்ட புஷ்ப பல்லக்கில் பகவான் எழுந்தருளி அருள்பாலிக்கும் தன்மை. அந்த பல்லக்கில் மயில் தோகை போன்ற வடிவமைப்பையுடையதும், ஒரு கண், ஒரு தலை, ஒரு பாதம் உடையதுமாகிய காகிதப்பூ.
VIII நாம் வாழும் உலகத்தில் மூன்று பங்கு கடலாகவும், ஒரு பங்கு நிலமாகவும் உள்ள அமைப்பு. மேலும் பூமியானது மூன்று ரேகைகளை கொண்டதாய் திகழ்கிறது. ( அட்சர ரேகை, பூமத்திய ரேகை, மகர ரேகை)
IX மனித மூளையானது எட்டு எலும்புகளால் பாதுகாக்கப்படுகிறது.அது சிறுமூளை, பெருமூளை, முகுளம் என்ற மூன்று பிரிவுகளாக செயல்படுகிறது.

நாகமேந்து மேருவெறாய் ........................................யியன்றதே

உலகத்திலேயே ஒன்றுக்கொன்று ஆதாரமாகத் தோன்றும் பொருள் எல்லாவற்றுக்கும் எம்பெருமானே ஆதாரம் என்கிறார் ஆழ்வார். திருவனந்தாழ்வனாலே தரிக்கப்பட்ட ஸ்வர்க்க லோகத்தையும் எட்டு யானைகள் தரிக்கிற பூமியையும் பரமபதத்தையும், ஆகாஸத்திலே தரிக்கப்படுகிற கங்கையையும், மேகமண்டலத்தையும், வைச்வானரக்நியையும், பஞ்சவ்ருத்தி பிரமாணங்களையும், பொருந்தி காப்பற்றி எல்லாவற்றையும் ஒரு பொருளை தரித்துக்கொண்டு நிற்கின்றதென்று உபநிஷத்துகளில் சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறு தரித்து நின்ற ஸ்வபாவம் உன்னிடத்தில் பொருந்தி இருக்கிறது. இதனையாவர் காணவல்லவர்.

- திவ்யபிரபந்தம்


பிரம்மம் எழுந்தருளியுள்ள லோகத்தில் சூர்யனது இயந்கை (மூலப்ரக்ருதி) ஒருபோதும் அஸ்தமிப்பதில்லை அங்கு எப்போதுமே பகல் தான். மிகப்பெரிய சூர்ய மண்டலத்திலே ஸ்வயம் பிரகாசமானவனும் அவித்தையாகிய இருளுக்கு அப்பாற்பட்டவனுமாகிய அந்த மஹா புருஷனை நான் அறிவேன்.

- சாந்தோக்ய உபநிஷத்

Lord Vishnu And Adhiseshan

இவ்வாறு பிரம்ம ஞானத்தை அறிந்தவன் எவனோ அவனுக்கு சூர்யன் உதிப்பதுமில்லை, அஸ்தமிப்பதுமில்லை அந்த ஞானியின் பரம ஆகாசத்தில் (தியானத்தின் உச்ச நிலையில்) பிரகாசிப்பது ஞான சூர்யன் அவர்களுக்கு ஞானமானது சூர்யனைப்போலே, அந்த பரம்பொருளை விளங்கச் செய்கிறது.

- சாந்தோக்ய உபநிஷத்

 
Copyright © 2020 - 2025. Powered by LAKE consulting Services.